/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தடகளப் போட்டியில் சி.கே.டி.பள்ளி சாதனைதடகளப் போட்டியில் சி.கே.டி.பள்ளி சாதனை
தடகளப் போட்டியில் சி.கே.டி.பள்ளி சாதனை
தடகளப் போட்டியில் சி.கே.டி.பள்ளி சாதனை
தடகளப் போட்டியில் சி.கே.டி.பள்ளி சாதனை
ADDED : செப் 22, 2011 12:09 AM
தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் வட்டம் கீழமுடிமன்சி.கே.டி.பள்ளி சாதனை
படைத்துள்ளது.
கீழமுடிமன் பள்ளியில் நடந்த தடகளப் போட்டியில் இளையோர்
பிரிவில் சி.கே.டி.பள்ளி 7ம் வகுப்பு மாணவர் ஜெயக்குமார், 100மீட்டர்
மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தனி நபர் சாம்பியன்
பட்டம் வென்றார். மூத்தோர் பிரிவில் 10ம் வகுப்பு மாணவர் மதன்
சக்கரவர்த்தி, 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், அதே பிரிவைச்
சேர்ந்த குரு ஆனந்த் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடமும், தட்டு
எறிதல் போட்டியில் முதல் இடமும், 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும்
பெற்றார். 7ம் வகுப்பு மாணவி சுகந்தி குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம்
இடம் பெற்றார். பிளஸ் 2 மாணவர் ரமேஷ் நீளம் தாண்டுதலில் முதல் இடமும்
200மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் நம்மாழ்வார்
மற்றும் பள்ளி நிர்வாகி சத்தியமூர்த்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்
பாராட்டினர்.