எடியூரப்பா ஜாமின் மனு அக்.15-ம் தேதி ஒத்தி வைப்பு
எடியூரப்பா ஜாமின் மனு அக்.15-ம் தேதி ஒத்தி வைப்பு
எடியூரப்பா ஜாமின் மனு அக்.15-ம் தேதி ஒத்தி வைப்பு
ADDED : அக் 03, 2011 03:52 PM
பெங்களுரூ: கர்நாடகாவில், நிலமோசடி மற்றும் ஊழல் வழக்கில் லோக்ஆயுக்தா போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான ஜாமின் மனுவை அக்.15-ம் தேதி கோர்ட் தள்ளி வைத்தது.
கர்நாடகா முதல்வராக எடியூரப்பா இருந்த போது நில மோசடி மற்றும் அரசு பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக தனியார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்ததன் பேரில், லோக்ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எடியூரப்பா ஜாமின் கோரி கடந்த செப்.30-ம் தேதியன்று மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று லோக்ஆயுக்தா சிறப்பு கோர்ட் நீதிபதி சுதீந்திராராவ் முன்பு வந்தது. மனுவை அக்.15-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


