/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வளவனூர் பேரூராட்சி தேர்தல் அ.தி.மு.க.,- தி.மு.க., பட்டியல்வளவனூர் பேரூராட்சி தேர்தல் அ.தி.மு.க.,- தி.மு.க., பட்டியல்
வளவனூர் பேரூராட்சி தேர்தல் அ.தி.மு.க.,- தி.மு.க., பட்டியல்
வளவனூர் பேரூராட்சி தேர்தல் அ.தி.மு.க.,- தி.மு.க., பட்டியல்
வளவனூர் பேரூராட்சி தேர்தல் அ.தி.மு.க.,- தி.மு.க., பட்டியல்
ADDED : செப் 27, 2011 11:38 PM
விழுப்புரம் : வளவனூர் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க., மற்றும் அ.தி.
மு.க., சார்பில் கவுன்சிலர்களாக போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.வளவனூர் பேரூராட்சியில் தி.மு.க.,சார்பில் போட் டியிடும் சேர்மன் வேட்பாளர் ஜீவா மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.இதில் வளவனூர் பேரூராட்சி 1வது வார்டில் ஆனந்தன், 2வது வார்டிற்கு சிசுபாலன், 3ம் வார்டிற்கு சுப்பு, 4 வது வார்டிற்கு திருசங்கு, 5ம் வார்டிற்கு ராஜாசம்பத், 6ம் வார்டிற்கு மகாலட்சுமி கிருஷ்ண மூர்த்தி மனு தாக்கல் செய்தனர்.மேலும் 7ம் வார்டிற்கு ராஜேந்திரன், 8ம் வார்டிற்கு ரமணி பாஸ்கரன், 9ம் வார்டிற்கு ராம்குமார், 10ம் வார்டிற்கு விஜயகுமார், 11ம் வார்டிற்கு விஜயா பெரியசாமி, 12ம் வார்டிற்கு மணிமேகலை முருகன், 13ம் வார்டிற்கு ரங்கசாமி, 14ம் வார்டிற்கு முருகன், 15ம் வார்டிற்கு செஞ்சுலட்சுமி ராஜாமணி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு நேற்று மனு தாக்கல் செய்தனர்.அ.தி.மு.க., சார்பில் பேரூராட்சி கவுன்சிலர் பதவி வேட்பாளர்கள் பட் டியல் அறிவித்து நேற்று காலை சேர்மன் வேட்பாளர் முருகவேலுவுடன் மனு தாக்கல் செய்தனர்.இதில், 1ம் வார்டிற்கு சிலம்பரசன், 2ம் வார்டிற்கு முகமது ரபி, 3ம் வார்டிற்கு சங்கர், 4ம் வார்டிற்கு பாஸ்கரன், 5ம் வார்டிற்கு சேகர், 6ம் வார்டிற்கு தேன்மொழி, 7ம் வார்டிற்கு லிங்கம், 8ம் வார்டிற்கு கற்பக வள்ளி, 9ம் வார்டிற்கு சுப்பிரமணி, 10ம் வார்டிற்கு காசிநாதன் மனு தாக்கல் செய்தனர்.மேலும் 11ம் வார்டிற்கு மீனா, 12ம் வார்டிற்கு சித்ரா, 13ம் வார்டிற்கு ரவிச்சந்திரன், 14ம் வார்டிற்கு பாவாடை சாமி, 15ம் வார்டிற்கு மலர் நாகராஜி மனு தாக்கல் செய்தனர்.


