/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தந்தைக்கு அரிவாள் வெட்டு : மகனுக்கு போலீசார் வலைதந்தைக்கு அரிவாள் வெட்டு : மகனுக்கு போலீசார் வலை
தந்தைக்கு அரிவாள் வெட்டு : மகனுக்கு போலீசார் வலை
தந்தைக்கு அரிவாள் வெட்டு : மகனுக்கு போலீசார் வலை
தந்தைக்கு அரிவாள் வெட்டு : மகனுக்கு போலீசார் வலை
ADDED : ஜூலை 27, 2011 02:22 AM
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே தந்தையை வெட்டிய மகனை போலீசார் தேடிவருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; மந்தித்தோப்பு கணேஷ்நகரை சேர்ந்த சுப்பையா மகன் முத்துப்பாண்டி.
கூலித்தொழிலாளியான இவருக்கு ஆறுமுகப்பாண்டி மற்றும் சின்னத்துரை ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஆறுமுகப்பாண்டி தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் முத்துப்பாண்டி வீடுகட்டிய நிலம் போக மீதி நிலம் இருந்ததை ஆறுமுகப்பாண்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முத்துப்பாண்டி மறுத்ததால் ஆறுமுகப்பாண்டி, தந்தை முத்துப்பாண்டியை வெட்டியதாகவும் தடுக்க வந்த சகோதரர் சின்னத்துரையையும் வெட்டியதாக கூறப்படுகிறது. இருவரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.