ADDED : ஜூலை 17, 2011 02:12 AM
குளித்தலை: குளித்தலை அருகே ராஜேந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்.
இவரது மகன் மோகன் (25). கொத்தனார். கடந்த 11ம் தேதி மோகன் வேலை செய்து விட்டு தனது தாய் சாந்தியிடம் சம்பளத்தை கொடுத்தார்.பெரியம்மா ருக்குமணியுடன் துறையூரில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றார். ஆனால் மீண்டும் அவர் ஊர் வீடு திரும்பவில்லை. உறவினர்களிடம், நண்பர்களிடம் விசாரித்தும் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை. இதனால் குளித்தலை போலீஸில் சாந்தி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.


