Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"தினமலர்' சார்பில் மாபெரும் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி

"தினமலர்' சார்பில் மாபெரும் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி

"தினமலர்' சார்பில் மாபெரும் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி

"தினமலர்' சார்பில் மாபெரும் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி

UPDATED : ஆக 04, 2011 12:02 PMADDED : ஆக 03, 2011 10:07 PM


Google News
Latest Tamil News
மதுரை : தினமலர், எல்.ஜி., சினிமா 3டி ஸ்மார்ட் 'டிவி' மற்றும் ஸ்ரீமீனாட்சி பேன் ஹவுஸ் இணைந்து வழங்கும், மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி (ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ), மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது.

கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சகாயம் துவக்கி வைத்தார். மீன் கண்காட்சி அரங்கை, போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் திறந்து வைத்தார்.

தாய்லாந்து, பாகிஸ்தான் உட்பட, வெளிநாட்டு ஸ்டால்களும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின், 282 ஸ்டால்களும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. ஸ்டால்கள் முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அழகுப் பெண்களை மேலும் அழகாக்க, பெண்களுக்கான தனி அரங்கு, அதில் முகத்தை அழகாக்கவும், கைகளை அலங்கரிக்க மெகந்தியும் காத்திருக்கிருக்கிறது. துள்ளி விளையாடும் மீன்களின் வண்ணமும், வடிவமும் நம்மை வா... வா... என அழைக்கும். நிச்சயம் உங்கள் மனதிற்கு இதம் தரும், இந்த மீன் கண்காட்சி.

கைநிறைய மனம்நிறைய, வகை வகையாய் வீட்டு உபயோகப் பொருட்களை, எங்கேயும் தேடி அலையாமல் சில்லென்ற குளிர்சாதன வசதியுடன் நிதானமாய் வாங்கலாம். அப்பாடா... பொருட்களை வாங்கியாச்சு, அடுத்து பசிக்குமே... அதற்கும் தயாராக இருக்கிறது ஸ்டால்கள். தித்திக்கும் திண்டுக்கல் வேணு பிரியாணி, டோமினோ பீசா, கிராமிய உணவு, பிற மாநில உணவுகள், ஐஸ்கிரீம், பழரச வகைகள் தயாராக உள்ளன.

பெரியவர்களை மகிழ்வித்தாயிற்று. குட்டீஸ்கள் ஏமாறக் கூடாதே. இலவச வண்ண பலூன்களை, அணிந்திருக்கும் ஆடைக்கேற்றாற் போல தருகிறோம். ஜாலியாய் கிரிக்கெட் பவுலிங் மெஷினில் பந்தை எறிந்து மகிழுங்கள்.

ஆ... ஊ... என கத்தி ஆரவாரப்படுத்த, திகைப்பூட்டும் த்ரில் திகில் மாளிகை... எல்லாமே உங்களுக்காக காத்திருக்கின்றன. வாருங்கள்... ஸ்டால்களில் உள்ளவற்றை பார்த்தும், ரசித்தும், புசித்தும், வாங்கியும் மகிழுங்கள்.

இன்று முதல், 8ம் தேதி வரை, தினமும் காலை 10.30 முதல், இரவு 8 மணி வரை கண்காட்சி நடக்கிறது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணம், 30 ரூபாய். அபி இம்போர்ட்டட் பர்னிச்சர், தேசிய சணல் வாரியம், பஞ்சாராஸ் பேஷியல், பட்டர் பிளை, அனிதா ஸ்டோர்ஸ், ராம்ராஜ் வேஷ்டிகள், காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட், பான் பான், சபோல் வாட்டர் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us