/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆக்கிரமிப்பாளர் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்டுஆக்கிரமிப்பாளர் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்டு
ஆக்கிரமிப்பாளர் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்டு
ஆக்கிரமிப்பாளர் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்டு
ஆக்கிரமிப்பாளர் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்டு
ADDED : ஜூலை 17, 2011 02:05 AM
கரூர்: போக்குவரத்துத் துறை அமைச்சர் சொந்த தொகுதியான கரூர் பஸ் ஸ்டாண்டு ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. பொது மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு பொருள்களை வைத்தும்,டூவீலரை நிறுத்தியும் ஆக்கிரமித்துள்ளனர்.கரூர் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், கோவை, ஈரோடு போன்ற பகுதிக்கு செல்ல மையமாக அமைந்துள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் பல நூற்றுக்கணக்கான பஸ்கள் இந்த வழியாக வந்து செல்கின்றன.
கரூர் பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதி இல்லாமல் வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் குறுக்கும் நெறுக்குமாக பஸ் ஸ்டாண்டில் நிறுத்துவதால் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.தற்போது பஸ் ஸ்டாண்டில் தென்புறத்தில் திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், பழனி போன்ற இடங்களுக்கும், வடக் கு புறமுள்ள டிராக்கில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தாராபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன. இரண்டு டிராக்கிலும் ஒரு சில பஸ்கள் மட்டுமே நிற்க போதுமான இடவசதி உள்ளதால், வெளியில் இருந்து வரும் பஸ்கள் வழியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.பஸ் ஸ்டாண்டில் 50க்கும் மே ற்பட்ட கடைகள் நகராட்சி மூல ம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்டில் உள்ள ஹோட்டல் உட்பட அனைத்துகடைக்காரர்கள் நடைமேடையை ஆக்கிரமிப்பு தங்கள் வியாபார பொருள்களை நிரப்பி வைத்துள்ளனர். இதனால், பொது மக்களு ம், பஸ் பயணிகளும் நடந்து செ ல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, பஸ் நிறுத்தப்படும் டிராக்கில் டூவீலர்கள் பஸ் ஸ்டா ண்டு முழுவதும் நிறுத்தி கொள்வதாலும், பஸ் ஸ்டாண்டி ல் டூவீலர்களை தாறுமாறாக ஓட்டுவதாலும் நெரிசலும், விபத்தும் அடிக்கடி ஏற்படுகிறது.முறையான கழிப்பிட வசதி இல்லாமல், ஒதுக்குப்புற இடத்தை திறந்த வெளி சிறுநீர் கழிக்கும் பகுதியாக பயணிகள் பயன்படுத்துவதால், பஸ் ஸ்டாண்ட் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி தான் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். அமைச்சரின் சொந்த தொகுதியில் இருக்கும் பஸ் ஸ்டாண்டு இட நெருக்கடியால் அல்லாடி வருகிறது. நாளுக்கு நாள வாகன பெருக்கம், மக்கள் நெருக்கடியா ல் கரூர் பஸ் ஸ்டாண்டை நகரின் ஒதுக்குப்புறத்திற்கு மாற்றுவதால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.கரூர் நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி கூறுகையில், ''பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் இட நெருக்கடியை தீர்க்க நகராட்சி மூலம் கரூர் அருகே திருக்காம்புலியூருக்கு மாற்ற தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியிருந்தோம். தற்போது ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது தெரியாது,'' என்றார்.