ADDED : செப் 17, 2011 09:45 PM
வத்தலக்குண்டு : ''தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,'' என, உதவி இயக்குனர் சங்கர் தெரிவித்தார்.
அவர் கூறியது: பிரிமிய தொகையில் 50 சதவீத மானியம் வழங்கப்படும். காய்களை, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு காப்பீடு செய்தால், பிரிமிய தொகை 825 ரூபாயை, அரசு செலுத்தும்.
பாக்கி தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும். மலர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் காப்பீடு. இதில் 1,200 ரூபாய் செலுத்த வேண்டும். மரவள்ளி கிழங்கிற்கு 729; மஞ்சள், முள் வெள்ளரி, பழ வகைகளுக்கு 900 ரூபாய் செலுத்த வேண்டும். தானியங்கி பருவநிலை பதிவு மையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். விவரங்களுக்கு உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.