/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்புஅண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
ADDED : செப் 17, 2011 02:14 AM
தூத்துக்குடி : முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடியில் சைக்கிள் போட்டிகள் நடந்தது.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விரைவு சைக்கிள் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளை எஸ்.பி.,நரேந்திரன்நாயர் துவக்கி வைத்தார். 13, 15,17 வயது பிரிவு அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 149 மாணவர்களும், 71 மாணவிகளும் கலந்து கொண்டனர். 13 வயது மாணவர்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஜோதிமுகேஷ்குமார் முதலிடத்தையும், முப்பிலிவெட்டி பஞ்சாயத்து யூனியன் பள்ளியைச் சேர்ந்த யோகேஸ்வரன் இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மகாராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 15வயது பிரிவில் குறுக்குசாலை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முனீஸ்வரன் முதல் இடத்தையும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாரிச்செல்வம் இரண்டாம் இடத்தையும், சாலைப்புதூர் ஏகரட்சகர் சபை பள்ளியைச் சேர்ந்த வேல்பாண்டி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 17 வயதுபிரிவில் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் முதல் இடத்தையும், சாலைப்புதூர் ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஜெபஸ் இஸ்ரேல் ராஜா இரண்டாம் இடத்தையும், விஜயகுமார் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 13 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சுமித்ரா முதல் இடத்தையும், அன்னமுத்தம்மாள் இரண்டாம் இடத்தையும், சாலைப்புதூர் ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முத்துகுமாரி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 15 வயது பிரிவில் சாலைப்புதூர் ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சுமதி முதல் இடத்தையும், திவ்யசாந்தி இரண்டாம் இடத்தையும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ÷ஷாபனா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 17 வயது பிரிவில் ஓட்டப்பிடாரம் டிஎம்பி., மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தமிழ்செல்வி முதல் இடத்தையும், சாலைப்புதூர் ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சத்யா இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த கார்த்திகா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி.,ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தாசன் வரவேற்றார். ஹாக்கி கோச் ரோஸ்பாத்திமாமேரி நன்றி கூறினார்.