/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்டத்தில் 17ல் 7 யூனியன்களிலும் 19ல் 5 யூனியன்களிலும் உள்ளாட்சி தேர்தல்தூத்துக்குடி மாவட்டத்தில் 17ல் 7 யூனியன்களிலும் 19ல் 5 யூனியன்களிலும் உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 17ல் 7 யூனியன்களிலும் 19ல் 5 யூனியன்களிலும் உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 17ல் 7 யூனியன்களிலும் 19ல் 5 யூனியன்களிலும் உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 17ல் 7 யூனியன்களிலும் 19ல் 5 யூனியன்களிலும் உள்ளாட்சி தேர்தல்
ADDED : செப் 23, 2011 12:56 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் 7 யூனியன்களிலும், இரண்டாம் கட்டமாக 5 யூனியன்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பினை தமிழக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 17 மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது.17ம் தேதி நடக்கும் முதல்கட்ட தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் 60 மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 19ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் போது கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டபிடாரம், புதூர் மற்றும் விளாத்திக்குளம் யூனியன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.