காமன்வெல்த் ஊழல்: சுப்ரீம் கோர்ட் மறுப்பு
காமன்வெல்த் ஊழல்: சுப்ரீம் கோர்ட் மறுப்பு
காமன்வெல்த் ஊழல்: சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : செப் 16, 2011 08:19 PM
புதுடில்லி :காமன்வெல்த் ஊழல் தொடர்பாக நடக்கும் விசாரணையில் தலையிட, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.இந்தியாவில் கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டி நடந்தது.
இதற்கான மைதானம் கட்டுவது, புதுப்பித்தல் பணி உட்பட பல்வேறு ஒப்பந்தங்களில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து மத்திய தணிக்கைக் குழு, சி.பி.ஐ., என, பல தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை எவ்வித தடங்கலும் இல்லாமல் நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என, டில்லியை தலைமையிடமாக கொண்ட தனியார் அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, கியான் சுதா மிஸ்ரா அடங்கிய 'பென்ச்' முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள்,' காமன்வெல்த் ஊழல் தொடர்பாக, துவக்கத்தில் இருந்தே சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டிய அவசியம் இல்லை,' என்று தீர்ப்பளித்தனர்.