/உள்ளூர் செய்திகள்/திருச்சி/"டிரான்ஸ்ஃபார்ம்' பழுதால் கருகும் பயிர்கள்: வாடும் விவசாயிகள்"டிரான்ஸ்ஃபார்ம்' பழுதால் கருகும் பயிர்கள்: வாடும் விவசாயிகள்
"டிரான்ஸ்ஃபார்ம்' பழுதால் கருகும் பயிர்கள்: வாடும் விவசாயிகள்
"டிரான்ஸ்ஃபார்ம்' பழுதால் கருகும் பயிர்கள்: வாடும் விவசாயிகள்
"டிரான்ஸ்ஃபார்ம்' பழுதால் கருகும் பயிர்கள்: வாடும் விவசாயிகள்
ADDED : ஆக 06, 2011 02:25 AM
திருச்சி : திருச்சி மாவட்டம் சிலுவைப்பட்டியில் 'டிரான்ஸ்ஃபார்ம்' பழுதடைந்ததால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி, கல்லகம், சாத்தப்பாடி அருகே ஒரத்தூர் கிராம மக்கள், தங்கள் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக பழுதான 'டிரான்ஸ்ஃபார்மை' மாற்றக் கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து ஒரத்தூர் விவசாயிகள் கூறியதாவது: சிலுவைப்பட்டி கிராமத்தில் கரும்பு, எள், நிலக்கடலை, கத்திரி ஆகிய பயிர்களை பயிர் செய்து வருகிறோம். கரும்பு 100 ஏக்கருக்கு மேலாக பயிர் செய்துள்ளோம். விவசாயிகளாகிய நாங்கள் ஆழ்குழாய் கிணறு அமைத்து 10 ஹெச்.பி., மின்மோட்டார் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் கல்லக்குடி மின்வாரியத்தை சேர்ந்த சாத்தப்பாடி டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுது அடைந்து மூன்று மாதமாகிறது. இதுகுறித்து மின்வாரியத்துக்கு தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பழுதடைந்த டிரான்ஸ்ஃபார்மரால் ஒரு நிமிட நேரம் கூட மோட்டார் ஓடாத நிலையில், விவசாய பயிர்கள் முற்றிலும் காய்ந்து போய் கிடக்கிறது. வயலில் பயிர்கள் கருகி நாசமாகி வருகின்றன. இதனால், விவசாயிகளாகிய நாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக 'டிரான்ஸ்ஃபார்மரை' பழுது பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.