மேயர் வேட்பாளர் அறிவிப்பு :கூட்டணியில் குழப்பம்
மேயர் வேட்பாளர் அறிவிப்பு :கூட்டணியில் குழப்பம்
மேயர் வேட்பாளர் அறிவிப்பு :கூட்டணியில் குழப்பம்
ADDED : செப் 16, 2011 02:22 PM
சென்னை: திருச்சி மேற்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பெயர் மற்றும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி தேர்தலில் பாட்டியிட உள்ள மேயர்களின் பெயர் பட்டியலை அ.தி.மு.க.,பொதுசெயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
வேட்பாளர்களின்பெயரை கண்ட அ.தி.மு.க., கூட்டணிகட்சிகள் அதிருப்தியடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் குறைந்தது 4 மாநகரட்சிகள் ஒதுக்கும் படி தே.மு.தி.க, கோரிக்கை விடுத்திருந்தது . அதே போல் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கோரிக்கைககள் விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.