Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/டி.வி.ராமசுப்பையர் சமுதாய ஒற்றுமைய உருவாக்க பாடுபட்டார் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆய்வாளர் பேச்சு

டி.வி.ராமசுப்பையர் சமுதாய ஒற்றுமைய உருவாக்க பாடுபட்டார் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆய்வாளர் பேச்சு

டி.வி.ராமசுப்பையர் சமுதாய ஒற்றுமைய உருவாக்க பாடுபட்டார் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆய்வாளர் பேச்சு

டி.வி.ராமசுப்பையர் சமுதாய ஒற்றுமைய உருவாக்க பாடுபட்டார் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆய்வாளர் பேச்சு

ADDED : அக் 05, 2011 12:09 AM


Google News

நாகர்கோவில் : தினமலர் நிறுவனர் டி.வி.

ராமசுப்பையர் சமுதாய ஒற்றுமையை உருவாக்க பாடுபட்டார் என நாகர்கோவிலில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சில் வரலாற்று ஆய்வாளர் பேசினார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெசர் ஜெபநேசர் தலைமை வகித்தார். வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் சேம்ராஜ் வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் வரலாற்று துறைத் தலைவர் முனைவர் சதாசிவன், நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் முனைவர் ஹெக்டர், முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் பேரா.மோகன்தாஸ் பேசினர். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் முனைவர் ஜாண் சகாயம் செல்லையா பேசும்போது கூறியதாவது: வரலாறு படித்தவர்களும், வரலாறு படைத்தவர்களும் உண்டு. வரலாறு படைத்தவர்களின் ஒருவர்தான் டி.வி.ராமசுப்பையர். இவர் 1908ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தழுவியமகாதேவர் கோயில் உள்ள ஊரில் பிறந்தார். சிறுவயதிலேயே ஜாதி, மத, பேதம் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் எண்ணம் கொண்டிருந்தார். பின் தங்கிய மக்களுக்காக தொண்டாற்றினார். சமுதாய உணர்வு, மனித நேயம், சமுதாய விழிப்புணர்வு இதுவே அவரது பண்புகள்.1966ம் ஆண்டு திருவனந்தபுரம் திவான் சி.பி.ராமசாமி ஐயர் கட்டாய கல்வி முறையை கொண்டு வந்தார். அதை இந்த பகுதி முழுவதும் பிரபலப்படுத்தியதோடு, தமிழ்நாட்டின் பல இடங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு எடுத்து சென்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் நலனுக்காக பல கல்வி நிறுவனங்கள் நிறுவ உறுதுணையாக இருந்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் வளம் பெருகுவதற்காக ரயில்வே சர்வீஸ் கொண்டு வர பாடுபட்டார். திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ரயில் பாதை கொண்டு வர 20 ஆண்டுகள் பாடுபட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்காக மார்ஷல் நேசமணியுடன் இணைந்து இணைப்பு போராட்டத்திற்கு தமது எழுத்துக்கள் மூலம் உறுதுணையாக இருந்தார். திருநெல்வேலியில் தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறையான சித்தா கல்லூரி துவங்க செய்தி மற்றும் கட்டுரைகள் மூலம் பாடுபட்டார். தமிழகத்தில் கோவில்பட்டி, திண்டுக்கல், பழனி உட்பட பல மாவட்டங்களில் குடிதண்ணீர் பிரச்னை இருந்தது. தண்ணீர் பிரச்னையை நிவர்த்தி செய்ய அரும்பாடுபட்டு பொதுமக்களுக்கு உதவினார். 1964ம் ஆண்டு அப்போதைய பிரதமர் லால்பகதூர்சாஸ்திரி கொண்டு வந்த துறைமுக திட்டத்தின் மூலம் தொழில்வளம் பெருக்கம் ஏற்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாக பாடுபட்டார். மலை பகுதிகள் நிறைந்த போடி, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து தனி மாவட்டமாக உருவாக்க முயற்சி மேற்கொண்டார். எல்லா தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து சமுதாய ஒற்றுமையை உருவாக்க பாடுபட்டார். இவ்வாறு தமிழ் மக்களுக்காவும், தமிழ்நாட்டிற்காகவும் பாடுபட்ட அவரது பெயரில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்துவது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. தமிழ் மக்களின் மனதில் என்றென்றும் இடம் பெற்றுள்ள டி.வி.ராமசுப்பையர் 1984ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நம்மை விட்டு பிரிந்தார். இவ்வாறு அவர் பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us