/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கைத்தறி சேலை கொள்முதல் செய்ய கோரிக்கைகைத்தறி சேலை கொள்முதல் செய்ய கோரிக்கை
கைத்தறி சேலை கொள்முதல் செய்ய கோரிக்கை
கைத்தறி சேலை கொள்முதல் செய்ய கோரிக்கை
கைத்தறி சேலை கொள்முதல் செய்ய கோரிக்கை
ADDED : செப் 01, 2011 02:00 AM
திருப்பூர் : கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் உள்ள துணி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பாரதீய கோவை மண்டல கைத்தறி நெசவாளர் சங்க செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது; தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பொது செயலாளர் லட்சுமணன், அமைப்பு செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கைத்தறியில் மட்டுமே உற்பத்தி என ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை பெரும்பாலான பகுதிகளில் விசைத்தறிகளில் உற்பத்தி செய்கின்றனர். பொள்ளாச்சி மற்றும் நெகமம் பகுதியில் இது அதிகளவில் உள்ளது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கைத்தறியில் எளிதாக நெசவு செய்ய 'ஏர் ரோமாட்டிக்' கருவி பொருத்த, மானிய விலையில் அதை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தேங்கி கிடக்கும் சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நல வாரியங்களை மேம்படுத்தி உரிய உதவி தொகை வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.