/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணி: பஞ்., தலைவர் ஆய்வுதேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணி: பஞ்., தலைவர் ஆய்வு
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணி: பஞ்., தலைவர் ஆய்வு
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணி: பஞ்., தலைவர் ஆய்வு
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணி: பஞ்., தலைவர் ஆய்வு
ADDED : செப் 01, 2011 01:56 AM
பாபநாசம்: கபிஸ்தலம் பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகளை பஞ்சாயத்து தலைவர் ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் யூனியன் கபிஸ்தலம் பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதில், கபிஸ்தலம் காங்கேயம்பேட்டை சுடுகாடு செல்லும் சாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்து வரும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணியினை பஞ்சாயத்து தலைவர் சோமசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு திட்ட பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, சுகாதார நிலைய வட்டார மருத்துவர் ராஜேஷ், பஞ்சாயத்து துணைதலைவர் கலியமூர்த்தி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் குமார், ஆனந்தன், கனகவல்லி மற்றும் பஞ்சாயத்து செயலர் தமிழ்செல்வன், மக்கள் நலப்பணியாளர் விஜயலெட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.