/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/மூப்பனார் நினைவு நாளில் நலத்திட்ட உதவி வழங்கல்மூப்பனார் நினைவு நாளில் நலத்திட்ட உதவி வழங்கல்
மூப்பனார் நினைவு நாளில் நலத்திட்ட உதவி வழங்கல்
மூப்பனார் நினைவு நாளில் நலத்திட்ட உதவி வழங்கல்
மூப்பனார் நினைவு நாளில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 01, 2011 01:56 AM
கும்பகோணம்: மூப்பனாரின் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்றுமுன்தினம் நலத்திட்ட உதவிகளை ஜி.ஆர்.மூப்பனார் வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த மூப்பனாரின் 10ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி, ஜி.கே.மூப்பனார் பேரவை மற்றும் தஞ்சை மாவட்ட நகர, வட்டார காங்கிரஸ் அனைத்து அமைப்பு சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோவில் எதிரே உள்ள மூப்பனார் சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாங்கம், மாவட்ட செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நடந்த ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கும்பகோணம் நகர காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் பாலு, மோகன், சுரேஷ் முன்னிலை வகித்தனர். நகரில் உள்ள 45வார்டுகளைச் சேர்ந்த 500 பேருக்கு øகிள், தையல் இயந்திரங்கள், ரிக்ஷா, வேட்டி, சேலைகள் ஆகியவற்றை ஜி.ஆர்.மூப்பனார் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் வட்டார தலைவர்கள் அமிர்தகணேசன், சாமிநாதன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் மழவராயர், நகர நிர்வாகிகள் பிரகலாதன், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே மூப்பனாரின் சொந்தஊரான சுந்தரப்பெருமாள் கோவிலில் மூப்பனாரின் 10ம் ஆண்டு நினைவு விழா நடந்தது. இவ்விழாவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் தி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அமிர்த கணேசன், சோழன்மாளிகை சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளியோருக்கு வேட்டி, புடவை, மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம் எழுதுகோல், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூப்பனாரின் வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து அனைவரும் அஞ்சலி செலுத்தினர். விழாவில் சுதாகர் மூப்பனார், பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பண்ணஉடையார், ஒன்றிய கவுன்சிலர்கள் நடுவக்கரைகிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், பஞ்., தலைவர்கள் குமார், வீரகண்ணன், தாராசுரம் நகர தலைவர் சண்முகம், சுவாமிமலை நகர காங்கிரஸ் தலைவர் பகவான்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.