/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூர் நகராட்சி 24வது வார்டில் 5 ஆண்டில் ஏராளமான பணிகள் : கவுன்சிலர் பெருமிதம்மேட்டூர் நகராட்சி 24வது வார்டில் 5 ஆண்டில் ஏராளமான பணிகள் : கவுன்சிலர் பெருமிதம்
மேட்டூர் நகராட்சி 24வது வார்டில் 5 ஆண்டில் ஏராளமான பணிகள் : கவுன்சிலர் பெருமிதம்
மேட்டூர் நகராட்சி 24வது வார்டில் 5 ஆண்டில் ஏராளமான பணிகள் : கவுன்சிலர் பெருமிதம்
மேட்டூர் நகராட்சி 24வது வார்டில் 5 ஆண்டில் ஏராளமான பணிகள் : கவுன்சிலர் பெருமிதம்
மேட்டூர் நகராட்சி, 24வது வார்டு, மேட்டூரின் இதய பகுதியான பஸ் ஸ்டாண்ட், சதுரங்காடி, தினசரி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி என, பல்வேறு முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.
மேட்டூர், 24வது வார்டு கவுன்சிலர் டாக்டர் சந்திரமோகன் கூறியதாவது: இரவு நேரத்தில் இருள் சூழ்ந்திருந்த மேட்டூர் பஸ் ஸ்டாண்டில், பயணிகள் நலன் கருதி, தர்மபுரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் செலவில், உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் தனியார் நிறுவன பங்களிப்புடன், 3 லட்சம் ரூபாயில் தடவழி பலகை, பயணிகள் ஓய்வறை, பஸ் ஸ்டாண்ட் மேற்கு மெயின் ரோட்டில் டவுன்பஸ் நிறுத்தும் இடத்தில், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
டெண்டர் விடப்பட்டு பலகாலம் நிலுவையில் இருந்த, 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான வணிக வளாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 3.50 லட்சம் ரூபாயில், தனியார் நிறுவன பங்களிப்புடன் காந்திசிலை வளாகம் புதுப்பிக்கப்பட்டு, உயர் கோபுர மின்விளக்கு, போக்குவரத்து சீரமைக்க, 1.5 லட்சம் ரூபாய் செலவில் ரோடு டிவைடர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், 6 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய், பொதுஜன சேவா பள்ளி அருகில், 1.25 லட்சம் ரூபாயில் கழிவுநீர் கால்வாய், போக்குவரத்து கழக பணிமனை அருகாமை குடியிருப்பில், ஒரு லட்சம் ரூபாயில் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நகராட்சி குடியிருப்பு கழிநீர் பிரச்னை தீர்க்க, 2.50 லட்சம் ரூபாய் செலவில் புதிய கழிவுநீர் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 லட்சம் ரூபாயில் சதுரங்காடி சுற்றுப்பகுதியில் தார்சாலைகள், சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சதுரங்காடி முதல் அரசுபள்ளி, போலீஸ் ஸ்டேஷன் வரை கழிவுநீர் கால்வாயுடன் தரமான தார்சாலை, 10 லட்சம் ரூபாயில் ஒர்க்ஷாப் கார்னர் முதல் சின்னபார்க் வரை மூன்று ஆண்டுக்கு முன்பு தார்ரோடு சீரமைப்பு, எம்.ஆர்.டி., சாலை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தவும், அஞ்சல் ஊழியர் குடியிருப்பு சாலை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குடிநீர் வடிகால்வாரிய குடியிருப்பில், மழைநீர் தேங்குவதை தடுக்க, 5 லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. ஒர்க்ஷாப் கார்னர்- சின்னபார்க் மெயின்ரோடு சீரமைக்க, 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளது. 24வது வார்டில், 20 லட்சம் ரூபாய் செலவில் ஆடு வதை கூடம் கட்டப்பட்டுள்ளது. அதில், தற்போது, 3.10 லட்சத்தில் பழைய கடைகள் புதுப்பிக்கும் பணி, கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி நடக்கிறது. இரண்டு லட்சம் ரூபாயில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
மேட்டூர் பஸ் ஸ்டாண்டில், 50 ஆயிரம் ரூபாயில் இலவச சிறுநீர் கழிப்பிடம், 1.80 லட்சம் ரூபாயில் கட்டண கழிப்பிடம் சீரமைப்பு, 60 ஆயிரம் ரூபாயில், குடிநீர் தொட்டி, பஸ் ஸ்டாண்ட் பயணிகள் அறையில் மின்விளக்குகள், மின்விசிறி வசதி, காய்கறி மார்க்கெட் உள்பகுதியில், 1.50 லட்சம் ரூபாயில் சுற்றுச்சுவர் உள்பட கடந்த ஐந்தாண்டுகளில், 24வது வார்டில், 2.5 கோடி ரூபாய்க்கும் மேல் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனக்கு பணியாற்ற வாய்ப்பளித்த இளைய சமுதாயத்துக்கும், 24 வார்டு பொதுமக்களுக்கும், பணிகளை நிறைவேற்ற காரணமாக இருந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு, எதிர்காலத்தில் வாய்ப்பளித்தால் காலச்சூழலால் செய்ய இயலாமல் போன பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


