/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கருமாண்டம்பாளையத்தில் விபத்துகள் அதிகரிப்புகருமாண்டம்பாளையத்தில் விபத்துகள் அதிகரிப்பு
கருமாண்டம்பாளையத்தில் விபத்துகள் அதிகரிப்பு
கருமாண்டம்பாளையத்தில் விபத்துகள் அதிகரிப்பு
கருமாண்டம்பாளையத்தில் விபத்துகள் அதிகரிப்பு
ADDED : செப் 28, 2011 12:51 AM
ஈரோடு: கரூர் சாலையில் உள்ள கருமாண்டம்பாளையம் நால்ரோட்டில் ரவுண்டான அமைக்கப்படாததால் சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கிறது.
ஈரோடு - கரூர் செல்லும் சாலையில் 25வது கிலோமீட்டரில், கொடுமுடி யூனியன்
கிளாம்பாடி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருமாண்டாம்பாளையம் நால்ரோடு பஸ்
நிறுத்தம் உள்ளது.நால்ரோட்டில் இருந்து தெற்கு நோக்கி கரூர் செல்லும்
சாலையும், மேற்கு நோக்கி சாலைப்புதூர் மற்றும் தாமரைப்பாளையம் செல்லும்
சாலையும், வடக்கு நோக்கி ஈரோடு செல்லும் சாலையும் உள்ளன.நால்ரோடு பகுதியில்
வாகனங்கள் சீராக பயணிக்க மூன்று புறமும், சாலையின் நடுவே தடுப்புசுவர்
அமைக்கப்பட்டுள்ளன. கரூர் - மதுரை வரை செல்லும் அனைத்து வாகனங்களும்
இவ்வழியே பயணிக்கின்றன. அதிக வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் சாலை
விபத்து தடுக்க, போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் எந்த உபகரணமும் வைக்க
வில்லை.இதனால், தாறுமாறாக செல்லும் வாகன ஓட்டிகளால் அதிகளவில் விபத்து
நடக்கிறது. அதேபோல் நால்ரோட்டின் நடுவே ரவுண்டானா அமைக்கப்படவில்லை.மூன்று
திசைகளில் இருந்தும் வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் அசுர வேகத்தில்
பயணிக்கின்றன.வேகத்தை தடை செய்ய வேகத்தடையோ அல்லது வளைவு சாலையை வாகன
ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில் எந்தவொரு அறிவிப்பு பலகையோ
வைக்கப்படவில்லை.அப்பகுதியில் நாளுக்கு நாள் விபத்து அதிகளவில் நடக்கிறது.