/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த கோரிக்கைநாமக்கல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த கோரிக்கை
நாமக்கல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த கோரிக்கை
நாமக்கல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த கோரிக்கை
நாமக்கல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த கோரிக்கை
நாமக்கல்: 'தேசிய தரச்சான்றிதழ் பெற்ற, நாமக்கல் மாவட்ட மருத்துமனையை, மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் சங்க நிர்வாகிகள், கலெக்டர் குமரகுருபரனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய தரச்சான்று பெற்ற நாமக்கல் மாவட்ட மருத்துவமனையை, நாமக்கல் மாவட்ட மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது, தாலுகா அந்தஸ்த்தில் உள்ள நாமக்கல் அரசு மருத்துமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அதிகப்படியான டாக்டர்களை நியமிக்க ஆவண செய்ய வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களின் பற்றாக்குறையை போக்கிட, தமிழக அரசு அறிவித்துள்ள நாமக்கல் மாவட்ட துணை சுகாதார செவிலியர் பயிற்சிப்பள்ளித் துவங்க, மோகனூர் சாலையில் நீதிமன்ற வளாகத்தில் இடம் வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


