/உள்ளூர் செய்திகள்/கரூர்/48 வார்டுகளுடன் புதிய கரூர் நகராட்சி விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பு48 வார்டுகளுடன் புதிய கரூர் நகராட்சி விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பு
48 வார்டுகளுடன் புதிய கரூர் நகராட்சி விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பு
48 வார்டுகளுடன் புதிய கரூர் நகராட்சி விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பு
48 வார்டுகளுடன் புதிய கரூர் நகராட்சி விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பு
ADDED : ஜூலை 11, 2011 03:00 AM
கரூர்: கரூர், தாந்தோணி, இனாம் கரூர் மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்துகளில் உள்ள 80 வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டு, 48 வார்டுகள் கொண்ட பெரிய கரூர் நகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.கரூர் நகராட்சியில் 36 வார்டுகளும், இனாம் கரூர் நகராட்சியில் 21 வார்டுகளும், தாந்தோணி நகராட்சியில் 18 வார்டுகளும், சணப்பிரட்டி பஞ்சாயத்தில் ஐந்து கொண்ட உள்ளாட்சி அமைப்புகள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கம், நிர்வாக வசதி, தொழில் வளர்ச்சி மற்றும் வருமானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் காரணமாக கரூர் நகராட்சியை விரிவாக்கம் செய்ய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 36 வார்டுகள் கொண்ட கரூர் நகராட்சியில் 18 வார்டுகளும், இனாம் கரூரில் 14 வார்டுகளும், தாந்தோணியில் 12 வார்டுகளும், சணப்பிரட்டி பஞ்சாயத்தில் நான்கு வார்டுகளாவும் குறைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட உள்ள புதிய கரூர் நகராட்சியில் 48 வார்டுகள் இடம் பெறவுள்ளது.விரிவாக்கம் செய்யப்படவுள்ள புதிய கரூர் நகராட்சியின் முதல் வார்டு, இனாம் கரூர் நகராட்சி அரிக்காரம்பாளையத்தில் ஆரம்பித்து, 48 வது வார்டு தாந்தோணி நகராட்சியில் உள்ள அ.அருகம்பாளையத்தில் முடிகிறது.
கரூர், இனாம் கரூர், தாந்தோணி மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்தில் உள்ள 80 வார்டுகளை, ஒன்றினைத்து 48 வார்டுகளாக குறைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 21 ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் கரூர், இனாம் கரூர், தாந்தோணி மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்து பகுதிகள் இணைக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இது தொடர்பான கோப்புகள் நகராட்சி நிர்வாக இயக்குர் அலுவலகத்துக்கு அனுப்பபட்டுள்ளது.எனவே 'விரிவாக்கம் செய்யப்படவுள்ள கரூர் பெரிய நகராட்சியின் முதல் தலைவராக யா ருக்கு வாய்ப்பு கிடைக்கும்' என் ற பேச்சு கரூர் அரசியல் கட்சியினரிடையே பரப்பரப்பாக தொட ங்கி விட்டது. அதே நேரத்தில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள கரூர் நகராட்சி, வரும் உள்ளாட்சி தேர்தலின் போது மாநகராட்சியாக உயர்த்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.