/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆதிவாசி பெண்ணிடம் வம்பு: வழிமறித்த 3 பேருக்கு "காப்பு'ஆதிவாசி பெண்ணிடம் வம்பு: வழிமறித்த 3 பேருக்கு "காப்பு'
ஆதிவாசி பெண்ணிடம் வம்பு: வழிமறித்த 3 பேருக்கு "காப்பு'
ஆதிவாசி பெண்ணிடம் வம்பு: வழிமறித்த 3 பேருக்கு "காப்பு'
ஆதிவாசி பெண்ணிடம் வம்பு: வழிமறித்த 3 பேருக்கு "காப்பு'
ADDED : செப் 06, 2011 12:18 AM
கூடலூர்: கூடலூர் ஓடக்கொல்லி பகுதியில் தனியாக நடந்து சென்ற ஆதிவாசி பெண்ணிடம் வம்பு செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர் மண்வயல் ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த மாதன் என்பவரின் மனைவி சைலா (23). ஆதிவாசியான இவர் நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு தன் குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மண்வயலில் இருந்து எதிரே வந்த மூன்று நபர்கள் சைலாவின் கையைப்பிடித்து இழுத்துள்ளனர். அவர் சப்தமிட்டதால் அவரின் வாயை பொத்தியுள்ளனர். எனினும், சைலாவின் சப்தம் கேட்டு அங்குள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்களை கண்ட மூவரும் தப்பியோடினர். ஒருவரை மட்டும் அப்பகுதியினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி பிடித்தனர். விசாரணையில், கார்குடி பகுதியை சேர்ந்த மகேஷ்(26), குமார்(32), மாயாரை சேர்ந்த சிவக்குமார்(29) என்பதும், இவர்கள் மூவரும் முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்களாக பணியாற்றி வருவது தெரியவந்தது. சைலா கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் எஸ்.ஐ., சோபியா வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தார்.