ADDED : செப் 25, 2011 01:19 AM
கோவை :உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதன்படி, மாநகராட்சி 73ம் வார்டு (அரசு மருத்துவமனை பகுதி) கோவை, எல்.ஜி.பி., பின்புறம்., நாட்டை காலனி பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி சரஸ்வதி (ஆதிதிராவிடர்) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மாநகராட்சி வார்டு எண்: 97 (குறிச்சி நகராட்சி) குறிச்சி பேஸ் 1 பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். மாநகர மேயர் பதவிக்கு, குறிச்சி, சுந்தராபுரம் அஞ்சல், சில்வர் ஜூப்ளி பகுதியை சேர்ந்த அன்பு செரிப், மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.