/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/குடியரசு தினவிழா போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்புகுடியரசு தினவிழா போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு
குடியரசு தினவிழா போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு
குடியரசு தினவிழா போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு
குடியரசு தினவிழா போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : செப் 20, 2011 01:32 AM
புதுக்கோட்டை: குடியரசு தினவிழா போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த அரசு மாமன்னர் கல்லூரி என்.சி.சி., மாணவர்களை சக மாணவர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்று கவுரவித்தனர்.
புதுடில்லியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு என்.சி.சி., மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடப்பது வழக்கம். இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என்.சி.சி., பிரிவு சார்பில் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரி என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்று சாதனைகள் படைத்துள்ளனர். இந்த ஆண்டு நடந்த போட்டியில் துப்பாக்கிச் சுடும் பிரிவில் மாணவர் பழனியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். 'மேப் ரீடிங்' என்ற தனித்திறன் போட்டியில் மாணவர் கலைச்செல்வன் இரண்டாவது பரிசினை வென்றார். குடியரசு தினவிழா போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், படித்த கல்லூரிக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் பழனியப்பன், கலைச்செல்வன் மற்றும் இவர்களுக்கு பயிற்சி அளித்த என்.சி.சி., அலுவலர் ராஜரெத்தினம் ஆகியோரை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் சக என்.சி.சி., மாணவர்கள் நேற்று நகர்ப்பகுதி முழுவதும் ஊர்வலமாக அழைத்துச்சென்று கவுரவித்தனர்.


