மதுரை அருகே லாரி, வேன் மோதல் : ஐந்து பேர் பலி; ஐந்து பேர் காயம்
மதுரை அருகே லாரி, வேன் மோதல் : ஐந்து பேர் பலி; ஐந்து பேர் காயம்
மதுரை அருகே லாரி, வேன் மோதல் : ஐந்து பேர் பலி; ஐந்து பேர் காயம்
ADDED : செப் 11, 2011 11:38 PM
துவரிமான்: மதுரை துவரிமான் அருகே, நான்கு வழிச்சாலையில் வேன் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், ஐந்து பேர் பலியாகினர்.
ஐந்து பேர் பலத்த காயத்துடன், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 10 பேர், இமானுவேல் நினைவிடத்திற்குச் செல்ல, மகேந்திரா மேக்ஸிமோ வேனில் கீழமாத்தூர் ரோட்டில் வந்து, நான்குவழிச் சாலையில் கமுதி நோக்கி சென்றனர். நேற்று மதியம் 2.45 மணியளவில், நாகமலை புதுக்கோட்டை 'அண்டர்பாஸ் பாலம்' அருகே சென்ற வேன் விதிகளை மீறி, வந்த வழியில் திரும்பியது. அப்போது, திண்டுக்கலில் இருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி, எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் லாரி நிற்காமல் சென்று, துவரிமான் கண்மாயில் 20 அடி பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் வேன் நொறுங்கியதில், வேனில் இருந்த டிரைவர் மூர்த்தி, 26, செந்தில், 24, விக்னேஷ்வரன், 23, முனியசாமி, 27, ஜெகனாதன்,18 ஆகியோர் சம்பவ இடத்தில் நசுங்கி பலியாகினர். மேலும், ஐந்து பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து, நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.