Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/லாரியில் இருந்து ஜல்லி கற்கள் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

லாரியில் இருந்து ஜல்லி கற்கள் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

லாரியில் இருந்து ஜல்லி கற்கள் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

லாரியில் இருந்து ஜல்லி கற்கள் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஆக 08, 2011 03:45 AM


Google News
ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சியில் அம்பாசமுத்திரம் - தென்காசி மெயின்ரோட்டில் லாரியில் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு சென்ற ஜல்லி கற்கள் ரோட்டில் கொட்டியதால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, கடையம் வழியாக லாரிகளில் ஜல்லி கற்கள் மற்றும் பெரிய கற்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த கற்கள் லாரிகளில் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்வதால் பலமுறை பலர் விபத்துக்களில் இருந்து தப்பியுள்ளனர்.நேற்று காலை டிப்பர் லாரியில் ஜல்லி கற்களை பின் கதவை சரியாக மூடாமல் கொண்டு சென்றதால் கதவு திடீரென தாமாகவே திறந்ததால் ஆழ்வார்குறிச்சி மெயின்ரோட்டில் பஸ் ஸ்டாண்டிலேயே ஜல்லி கற்கள் முழுவதும் ரோட்டில் கொட்டியது. நல்ல வேளையாக பின்னால் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக அடிபடாமல் தப்பினர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரிய கற்கள் கொண்டு செல்லும்போதும் லாரியில் மேலே கற்கள் தெரியும் அளவிற்கு கொண்டு செல்கின்றனர். இதனை எந்தவொரு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.கடந்த வாரம் குண்டுக்கல் கொண்டு செல்லும் போது திடீரென பிரேக் அடித்ததில் பின்னால் இருந்த கற்கள் திடீரென ரோட்டில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அடிபடவில்லை. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கற்களை கொண்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது. பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இந்த சம்பவங்களுக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us