திருச்செங்கோட்டில் 2 ரவுடிகள் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
திருச்செங்கோட்டில் 2 ரவுடிகள் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
திருச்செங்கோட்டில் 2 ரவுடிகள் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
ADDED : செப் 09, 2011 08:36 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே நள்ளிரவில் ஆயுதங்களுடன் நடமாடிய இரு ரவுடிகளை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளியில் உள்ள மணக்காடு பகுதியில் ஒரு வீட்டில் 10 கொண்ட கும்பல் பதுங்கியிருந்துள்ளது. இவர்களில் 2 பேர் நேற்று நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சிலரை கொலை செய்யும் திட்டத்தில் நடமாடியுள்ளனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ரவி (24), மணிகண்டன் (28) என தெரியவந்துள்ளது.
மேலும் இவர்களிடம் விசாரணையில் இவர்கள் அப்பகுதியில் முன்பு கொலை செய்யப்பட்ட சசிக்குமார் என்ற ரவுடியின் கூட்டாளிகளை தேடி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மேலும் பிரபு (25), தேவா ஆகிய ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் சாக்கு மூடையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்செங்கோடு டவுண் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.