Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரி மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் 65,000 ஹெக்டேரில் சாகுபடி: கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் 65,000 ஹெக்டேரில் சாகுபடி: கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் 65,000 ஹெக்டேரில் சாகுபடி: கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் 65,000 ஹெக்டேரில் சாகுபடி: கலெக்டர் தகவல்

ADDED : செப் 18, 2011 01:29 AM


Google News

தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் 65,000 ஹெக்டேரில் பயிர் செய்யப்பட்டுள்ளது' என கலெக்டர் லில்லி தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் 65 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

இது மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் உணவு பொருட்களில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. துவரை, உளுந்து, காராமணி, பச்சைபயிறு, கொண்டைகடலை, கொள்ளு ஆகியவை பிரதான பயிர் வகையாகும். பயிறு வகையில் சாதாரணமாக புரதச்சத்து 20 முதல் 24 சதவீதம் உள்ளது. புரதச்சத்து மாற்றத்துக்கு மணிசத்து அவசியமாகும். மணிசத்தானது மண்ணில் இருந்து கிடைப்பதை விட இலை வழியாக பயிருக்கு எளிதாக கிடைக்கிறது.



பயிர் பூக்கும் பருவத்துக்கு பின் வேர்களின் மூலம் ஊட்டசத்து எடுக்கும் தன்மை குறைகிறது. ஆகையால், தழைச்த்து மற்றும் மணிசத்து கொண்ட டி.ஏ.ப்பி., கரைசலை தெளிப்பதன் மூலம் இலை வழியாக இவை உள்ளே சென்று பயனளிக்கிறது. எனவே 2 சத டி.ஏ.ப்பி., கரைசலை ஒரு முறை பூக்கும் தருணத்திலும், அதை தொடர்ந்து 15 நாளில் இன்னொரு முறையும் இலை வழியாக தெளிப்பதன் மூலம் பூப்பிடிப்பு தன்மை காய் பிடிப்பு தன்மை மற்றும் திரண்ட பயிறு விதைகதளை பெற இயலும். இந்த பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக நடப்பு ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் 18.370 ஹெக்டேரில் ஒரு ஹெக்டேருக்கு 250 ரூபாய் மனிய விலையில் 45.925 லட்சம் மதிப்பு டி.ஏ.ப்பி., விநியோகம் செய்யப்படவுள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு இரு முறை தெளிக்க 25 கிலோ டி.ஏ.ப்பி., பரிந்துரைக்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயறு வகை பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து உயர் மகசூல் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



இது குறித்து வேளாண் இணை இயக்குனர் ராஜன் வெளியிட்ட அறிக்கை: ஒரு முறைக்கு 12.5 கிலோ டி.ஏ.ப்பி.,கரைசலை 10 லிட்டர் நீரில் முதல் நாள் ஊற வைத்து மறு நாள் வாளியில் தெளிந்திருக்கும் நீரை வடிகட்டி அதனுடன் மேலும் நீர் சேர்த்து அதை 625 லிட்டர் கரைசலாக தயாரித்து 10 லிட்டர் கரைசல் வீதம் கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் இலைகளில் நன்குபடும்படி தெளிக்க வேண்டும்.தெளிப்பின் போது, போதிய ஈரத்தன்மை மண்ணில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us