/உள்ளூர் செய்திகள்/திருச்சி/புத்தனாம்பட்டி நேரு கல்லூரியில் ஆங்கில மொழி பயிற்சி வகுப்புபுத்தனாம்பட்டி நேரு கல்லூரியில் ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு
புத்தனாம்பட்டி நேரு கல்லூரியில் ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு
புத்தனாம்பட்டி நேரு கல்லூரியில் ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு
புத்தனாம்பட்டி நேரு கல்லூரியில் ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு
ADDED : ஜூலை 29, 2011 11:42 PM
துறையூர்: திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கான ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு நடந்தது.பயிற்சி துவக்கத்தில் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் தமிழ்மணி வகுப்பின் நோக்கம் குறித்து பேசியதாவது:முதலாமாண்டு மாணவ, மாணவியர் கிராம சூழலில் படித்து இங்கு உயர்கல்வி பயில வந்துள்ளீர்கள்.
இதுவரை ஆங்கிலத்தை வெறும் மார்க்குக்காக மட்டுமே படித்தவர்கள் தான் அதிகம் இருப்பீர்கள். ஆங்கிலம் கற்பதிலும் பேசுவதிலும் பலருக்கும் தயக்கம், பயம் இருக்கும்.இதைபோக்க ஆறுநாள் பயிற்சி கல்லூரி நிர்வாகம் சார்பில், ஆங்கில மொழியில் வாக்கியம் உருவாக்குதல், இலக்கணம், ஸ்போக்கன் நடத்தப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆறு நாள் பயிற்சி வகுப்பில் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் கோமகன், இந்திராதேவி பாடம் நடத்தினர்.பயிற்சி நிறைவு விழா கல்லூரி மூக்கப்பிள்ளை ஆடிட்டோரியத்தில் கல்லூரி முதல்வர் ராமசாமி தலைமையில் நடந்தது. கல்லூரி தலைவர்கள் பொன்னம்பலம், பாலசுப்ரமணியன் பேசியதாவது:தமிழை தவறாக பேசினாலும் கூட ஆங்கிலம் பேசுவதில் அனைவருக்கும் பயம் உள்ளது. இதை இப்பயிற்சி வகுப்பு போக்க உதவியிருக்கும். ஒரு மொழியில் பயமின்றி பேச, எழுத அதிகவார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு நாளிதழ்கள், புத்தகங்கள் உதவும், கல்லூரியிலுள்ள நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளது. மூன்றாண்டுகளில் நீங்கள் நூறு புத்தகமாவது படிக்க வேண்டும். கல்லூரி வளாகத்திற்குள் ஆசிரியர்களுடன் சக நண்பர்களுடன் தவறாக இருந்தாலும் கூட ஆங்கிலத்தில் பேசுங்கள். மூன்றாண்டு கஷ்டப்பட்டால் அதன் பின் வாழ்வு வளமாகும்.இவ்வாறு அவர் பேசினர்.விழாவில், விருந்தினராக பங்கேற்ற இமயம் கல்லூரி முதல்வர் ராஜப்பன் பேசியதாவது:உங்கள் பெற்றோர் உங்களை படிக்க கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். படிப்பதில் மட்டும் முழு கவனம் செலுத்துங்கள். ஆங்கிலம் நன்கு பேச தெரிந்தவர்களுக்கு வேலைகாத்திருக்கிறது. அந்த வேலைபெற தேவையான தகுதியை கல்லூரி படிப்பு தருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.வகுப்பில் முதலாமாண்டு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்று பயனடைந்தனர். தொடர்ந்து பயிற்சி பெற்ற அனைவருக்கும் புத்தகம் வழங்கப்பட்டது.முதலாமாண்டு மாணவிகள் கவி நிலவு, கவுதமி விழாவை தொகுத்து வழங்கினர்.