சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2015ல் நிறைவடையும்:தமிழக அரசு தகவல்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2015ல் நிறைவடையும்:தமிழக அரசு தகவல்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2015ல் நிறைவடையும்:தமிழக அரசு தகவல்

சென்னை:'சென்னை மெட்ரோ ரயில் திட்டம், 2015ம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மீதான, மானிய கோரிக்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மாநிலத் திட்டக்குழு, 12வது ஐந்தாண்டு திட்டம் தயாரிப்பது தொடர்பாக கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தவும், மாநிலத் திட்டக்குழு பணியாளர்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதற்காக நடப்பு நிதியாண்டில், 30 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கான, 12வது திட்ட அணுகுமுறை அறிக்கையை, மத்திய திட்டக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன், மாநில திட்டக்குழு, இது தொடர்பாக, அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடையவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு, அறிக்கை தயாரிக்கும். ஐந்தாண்டு திட்டத்திற்கான துறைவாரியான அத்தியாயங்களைத் தயாரிக்க இந்த அறிக்கை உதவும்.சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கால அட்டவணைப்படி நடந்து வருகிறது. உயர்த்தப்பட்ட வழித்தடங்களுக்கான, ஏழு பகுதிகள், நிலத்தடி வழித்தடங்களுக்கான, ஐந்து பகுதிகள், பணிமனைக்காக, இரண்டு பகுதிகள் மற்றும் அமைப்பு சார்ந்த, எட்டு பகுதிகளுக்கும் சேர்த்து, 10 ஆயிரத்து, 306 கோடியே, 75 லட்ச ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டம், 2015ம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.