/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நான்குநேரி அருகே கோஷ்டி மோதல் 12 பேர் மீது வழக்கு; ஒருவர் கைதுநான்குநேரி அருகே கோஷ்டி மோதல் 12 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
நான்குநேரி அருகே கோஷ்டி மோதல் 12 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
நான்குநேரி அருகே கோஷ்டி மோதல் 12 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
நான்குநேரி அருகே கோஷ்டி மோதல் 12 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
ADDED : ஆக 03, 2011 12:35 AM
திருநெல்வேலி : நான்குநேரி அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக இரு தரப்பையும் சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஒருவர் கைது செய்யப்பட்டார். நான்குநேரி அருகே வடக்கு பாப்பான்குளம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சேர்மன்(35). சம்பவத்தன்று இவருக்கும், அதே தெருவை சேர்ந்த மாரியப்பனுக்கும்(25) முடுக்கில் கால்நடை மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இரு தரப்பும் எதிர்தரப்பை கம்பு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. சேர்மன், அவர் தம்பி சுடலைமுத்து, மாரியப்பன், அவர் தம்பி முத்துக்கிருஷ்ணன், தந்தை பேச்சிமுத்து, தாய் லட்சுமி காயமடைந்தனர். இவர்கள் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பும் விஜயநாராயணம் போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை விசாரணை நடத்தினார். சேர்மன் அளித்த புகாரின்படி, பேச்சிமுத்து, மாரியப்பன், முத்துக்கிருஷ்ணன், லட்சுமி மீதும், மாரியப்பன் அளித்த புகாரின்பேரில் சேர்மன், சுடலைமுத்து, கருப்பசாமி(26), ஆறுமுகம், வேலம்மாள், பேச்சியம்மாள், ராஜம்மாள், சேர்மனின் மைத்துனர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கருப்பசாமி நேற்று கைது செய்யப்பட்டார்.