/உள்ளூர் செய்திகள்/சேலம்/அ.தி.மு.க.,வினரை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை :எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பாய்ச்சல்அ.தி.மு.க.,வினரை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை :எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பாய்ச்சல்
அ.தி.மு.க.,வினரை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை :எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பாய்ச்சல்
அ.தி.மு.க.,வினரை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை :எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பாய்ச்சல்
அ.தி.மு.க.,வினரை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை :எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பாய்ச்சல்
ADDED : செப் 06, 2011 01:26 AM
சேலம்: ''அ.தி.மு.க.,வினரை பற்றி பேச, மாஜி துணை முதல்வர் ஸ்டாலினுக்கு
அருகதை இல்லை,'' என்று, சேலம் மேற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,
வெங்கடாஜலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு தொகுதி அ.தி.மு.க.,
எம்.எல்.ஏ.,வும், மாநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலாளருமான வெங்கடாஜலம்
வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வில் அமைச்சர்களாக
இருந்தவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது போலவும்,
அ.தி.மு.க., அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி ஆகியோர் மீது
கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது இல்லையென்றும், நான் அரசு
அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி, சேலத்தில் நடந்த தி.மு.க.,
பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் கடந்த ஐந்தாண்டில், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்,
கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரும் பொதுமக்களின் சொத்துக்களை
அபகரித்து, அரசின் பணத்தை கொள்ளையடித்ததால்தான், தி.மு.க.,வுக்கு
எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வழங்காமல் மக்கள் தேர்தலில் தகுந்த பாடம்
புகட்டியுள்ளனர். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோட்டில் ராஜா,
திருச்சியில் நேரு, விழுப்புரத்தில் பொன்முடி, திண்டுக்கல்லில் பெரியசாமி,
கோவையில் பொங்கலூர் பழனிசாமி, ராமநாதபுரத்தில் சுப.தங்கவேலன், மதுரை
மற்றும் அதை சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் மத்திய அமைச்சர் அழகிரி, அவரது
குடும்பத்தார் என அனைவரும் தி.மு.க., ஆட்சியில் அடித்த கொட்டத்துக்கு
அளவேயில்லை. அ.தி.மு.க., அரசு ஆட்சி அமைத்த, 100 நாளில் தேர்தல்
அறிக்கையில் கூறியபடி, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. யார் தவறு
செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் தூய்மையான ஆட்சியில், பொய் வழக்கு
போடுவதாக கருணாநிதியும், ஸ்டாலினும் பேசி வருவது கண்டனத்துக்குரியது. கடந்த
ஆட்சியில் தவறு செய்வர்கள் மீது, ஆதாரத்தின் பேரிலேயே நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. செய்த தவறை உணராமல் வாய்க்கு வந்ததை பேசினால்,
மக்கள் ஏற்க மாட்டார்கள். அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்
மட்டுமல்ல, அ.தி.மு.க., தொண்டர்களை பற்றி பேசக்கூட அருகதை இல்லாதவர்
ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


