/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தடுப்பு சுவர் இடிந்து வீடு தரைமட்டம் உயிர் தப்பிய பெண்களுக்கு பாதுகாப்பில்லைதடுப்பு சுவர் இடிந்து வீடு தரைமட்டம் உயிர் தப்பிய பெண்களுக்கு பாதுகாப்பில்லை
தடுப்பு சுவர் இடிந்து வீடு தரைமட்டம் உயிர் தப்பிய பெண்களுக்கு பாதுகாப்பில்லை
தடுப்பு சுவர் இடிந்து வீடு தரைமட்டம் உயிர் தப்பிய பெண்களுக்கு பாதுகாப்பில்லை
தடுப்பு சுவர் இடிந்து வீடு தரைமட்டம் உயிர் தப்பிய பெண்களுக்கு பாதுகாப்பில்லை
ADDED : ஆக 07, 2011 01:53 AM
கூடலூர் : கூடலூர் எஸ்.எஸ்., நகரில் மழையில் தடுப்புச் சுவர் இடிந்து வீடு தரைமட்டமான சம்பவத்தில் ஒரு குழந்தை மற்றும் மூன்று பெண்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
கூடலூர் தேவர்சோலை சாலை மின் துறை அலுவலகம் எதிரேயுள்ள எஸ்.எஸ்., காலனியில் வசிக்கும் ராஜாமணி. இவர் வீட்டை சுற்றி தடுப்புச் சுவர் அமைத்துள்ளனர். அதன் கீழ் பகுதியில் பாத்துமா என்பவர் வீடு அமைந்துள்ளது.கூடலூரில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழையில், இரவு 8.30 மணிக்கு ராஜமணி வீட்டின் தடுப்புச் சுவரில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இது குறித்து ராஜாமணி, பாத்துமா வீட்டுக்கு தகவல் கொடுத்து அவர்களை வீட்டை விட்டு வெளியேரும் படி கூச்சலிட்டுள்ளார். அந்த வீட்டிலிருந்து பாத்துமா, அவர் மகள்கள் அஷினா, அஜினா, ஆகியோர் குழந்தை அன்சியாவை (5) தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.சில நிமிட இடைவெளியில், தடுப்புச்சுவர் இடிந்து, பாத்துமா வீடு தரைமட்டமானது. வீட்டிலிருந்து அனைத்து பொருள்களும் பயன்படுத்த முடியாத வகையில் நாசமானது. இதில் பாத்துமா குடும்பத்தினர் அதிர்ஷ்ட வசமாக காயின்றி உயிர் தப்பினர்.தடுப்புச் சுவர் இடிந்ததால் ராஜாமணி வீடு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை, கூடலூர் நகராட்சி செயல் அலுவலர் (பொ) நஞ்சுண்டன், பணி மேற்பார்வையாளர் சுரேஷ், கவுன்சிலர் ஆண்டனி, கிராம நிர்வாக அலுவலர் வேலாயுதம் நேரில் ஆய்வு செய்தனர். இப்பகுதியில் மேலும் மண் சரிவு ஏற்படுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.