/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/"வெற்றிவேல், வீரவேல்' பாடல் முழங்க சேர்மன் வேட்பாளர் நூதனப் பிரச்சாரம்"வெற்றிவேல், வீரவேல்' பாடல் முழங்க சேர்மன் வேட்பாளர் நூதனப் பிரச்சாரம்
"வெற்றிவேல், வீரவேல்' பாடல் முழங்க சேர்மன் வேட்பாளர் நூதனப் பிரச்சாரம்
"வெற்றிவேல், வீரவேல்' பாடல் முழங்க சேர்மன் வேட்பாளர் நூதனப் பிரச்சாரம்
"வெற்றிவேல், வீரவேல்' பாடல் முழங்க சேர்மன் வேட்பாளர் நூதனப் பிரச்சாரம்
ADDED : அக் 08, 2011 01:25 AM
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி சேர்மன் பதவிக்கு, தே.மு.தி.க., சார்பில்
போட்டியிடும் வேட்பாளர் வேல், தனது பெயருக்கு ஏற்றவாறு, 'வெற்றிவேல்...
வீரவேல்...' என்ற பக்திப் பாடலை முழங்கவிட்டு, நூதனப் பிரச்சாரம்
மேற்கொள்வது, அனைவரது கவனத்தையும் ஈர்க்கச் செய்துள்ளது. தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்கள், ஓட்டு கேட்டுச் செல்லும்போது, மக்களை ஈர்க்கச்
செய்யும் வகையில், மேள, தாளம் முழங்க செல்வர். குறிப்பாக, திரைப்பட
கொள்கைப் பாடல்கள், அவற்றுக்கான நடனம், வேட்பாளர்களின் பிரச்சாரத்தில் இடம்
பெறுவது வழக்கம். அந்த வகையில், நாமக்கல் நகராட்சியில், சேர்மன்,
கவுன்சிலர் உள்ளிட்ட வேட்பாளர்கள், தங்களது பிரச்சாரத்தின்போது திரைப்பட
பாடல்கள், மேள, தாளம் முழங்க பெரும் ஆர்ப்பரிப்போடு பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். தே.மு.தி.க., சார்பில், நகராட்சி சேர்மன் பதவிக்கு
வக்கீல் வேல் போட்டியிடுகிறார். அவர், நாள்தோறும் நகராட்சிக்கு உட்பட்ட
வார்டுகளில் கட்சியினருடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது
பிரச்சார வாகனத்தில், திரைப்பட பாடல்கள் அவ்வப்போது முழங்குகிறது. அதில்
குறிப்பாக, தனது பெயருக்கு தக்கவாறு, 'வெற்றி வேல்... வீரவேல்... எதிரி
மீது போர்தொடுக்கும் சக்திவேல்... ஞான சக்திவேல்' என்ற பக்திப் பாடலை ஒலி
பரப்பியபடி, நூதனப் பிரச்சாரம் மேற்கொள்வது, அனைவரது கவனத்தையும்
ஈர்த்துள்ளது.


