/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பாஸ்போர்ட்'"வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பாஸ்போர்ட்'
"வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பாஸ்போர்ட்'
"வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பாஸ்போர்ட்'
"வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பாஸ்போர்ட்'
ADDED : அக் 02, 2011 09:08 PM
கோவை : அவினாசிலிங்கம் பல்கலையில் நாட்டு நலப்பணித்திட்ட குழு சார்பில் 'பாஸ்போர்ட் விழிப்புணர்வு' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமொழி தலைமை வகித்தார்.
கோவை எம்பரர் டிராவலைன் நிர்வாக இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்து பேசியதாவது: தேசத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்றுவர மொழி ஒரு பிரச்னையாக உள்ளது. ஆங்கில மொழியுடன் இந்தியும் தெரிந்திருந்தால் மட்டுமே பிறரிடம் பேசவும், பழகவும், சமுதாயத்தில் இணை யாகவும் இருக்க முடியும். தேவைகள் சொல்லிக்கொண்டு வருவதில்லை; திடீரென வருகின்றன.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் வரும்போது, பாஸ்போர்ட் இல்லாமல் அதிக வாய்ப்புகள் நழுவுகின்றன. அதேவாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதில்லை. ஒருவரின் அடையாளம், குடியுரிமைகளை நிரூபிக்கும் கருவியாக பாஸ்போர்ட் உள்ளது. ஒருவரின் பிறப்பை அடையாளம் காட்டவும், ஓரிடத்தில் தங்கவும், மேல்நிலைப் படிப்பு அல்லது பணிகளுக்கு வெளிநாடுகள் செல்லவும், இடம்பெயர உதவும் ஆவணம் பாஸ்போர்ட். எழுத்து வடிவில் எடுத்துரைக்கும் அதிகாரப்பூர்வமான, பதிவேடாக, பேன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை முதலியன பெறவும் இது உதவுகிறது. மாணவர்கள் இது குறித்து விழிப்புடன் இருப்பதோடு, தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
எம்பரர் டிராவலைன் முதன்மை செயல் அலுவலர் டோமினிக், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கன்னியம்மாள், சுபா, ஞானசுகிர்தம், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


