ADDED : செப் 16, 2011 12:52 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக
நிறைவு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர்
கோவிலில் நான்காவது கும்பாபிஷேகம் மூன்றாண்டுகளுக்கு முன் நடந்தது.
நேற்று
மூண்றாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நடத்தினர். அதிகாலையில்
பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.இதனை தொடர்ந்து
நடராஜர் மண்டபத்தில் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விநாயகர் வழிபாட்டுக்கு
பின் கும்ப கலசங்களை வைத்து பூஜை செய்தனர். யாகம் வளர்த்து மந்திரங்களை
வாசித்து, சிவகாமி அம்மன் மற்றும் சிதம்பரேஸ்வரருக்கு கலசாபிஷேகம் செய்து
வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழி பட்டனர்.


