/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறந்த மேலாண்மைக்கு தொலைநோக்கு பார்வை தேவைசிறந்த மேலாண்மைக்கு தொலைநோக்கு பார்வை தேவை
சிறந்த மேலாண்மைக்கு தொலைநோக்கு பார்வை தேவை
சிறந்த மேலாண்மைக்கு தொலைநோக்கு பார்வை தேவை
சிறந்த மேலாண்மைக்கு தொலைநோக்கு பார்வை தேவை
ADDED : ஆக 25, 2011 11:28 PM
கோவை :'எம்.பி.ஏ., படித்து நிர்வாக துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு,
தொலைநோக்கு பார்வை அவசியம்' என, துணைவேந்தர் கருணாகரன் பேசினார்.
நவக்கரை,
ஏ.ஜே.கே., கல்லூரியில் எம்.பி.ஏ., மாணவர்களுக்கான, 'வாய்ப்புகள் மற்றும்
சவால்கள்' குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லூரியின்
செயலாளர் அஜீத் குமார் லால் மோகன் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர்
ராஜேஸ்வரி வரவேற்றார். மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன,
அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கருணாகரன், கருத்தரங்கை துவக்கி வைத்து
பேசியதாவது: முதுநிலை படிப்புகளில், உலகளவில் அதிக மதிப்புள்ள டிகிரியாக
எம்.பி.ஏ., உள்ளது. எல்லா துறைகளிலும் வேலைவாய்ப்பு இருந்தாலும், நிறுவனம்
மற்றும் பணியாளர்களை வழிநடத்தல் மேலாண்மை துறையாகும். தகவல் தொடர்பு திறன்,
கம்ப்யூட்டர் பயன்பாடு, நிர்வாகத்தில் உள்ளவர்களின் கூட்டு முயற்சியை
பொறுத்து, வெற்றி அமையும். தலைமை பண்பில் உள்ளவர்க்கு, தொலைநோக்கு சிந்தனை,
அதிக ஈடுபாடு, சூழ்நிலையை சமாளிக்கும் திறமை, தட்டிக்கொடுத்து
வேலைவாங்கும் மனப்பக்குவம் போன்ற பண்புகளை பெற்றிருக்க வேண்டும். தலைமை
பண்பிற்கான குணநலன்களை பெற்ற தலைவர் மூலம் தான், நிர்வாகத்தை சிறப்பாக
வழிநடத்த முடியும். சிறந்த நிர்வாகத் திறனை வெளிப்படுத்த, எம்.பி.ஏ.,
மாணவர்களால் முடியும். எல்லா துறை நிறுவனங்களிலும், மேலாண்மை படிப்பிற்கான
வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. உலகளவில் பொருளாதார அள வில், இந்தியாவின்
வளர்ச்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு, போதுமான மனிதவளம் இருக்கிறது.
இன்றைய உலகமயமாக்கலில், சர்வதேச நிறுவனங்களோடு இந்தியா நிறுவனங்கள்
போட்டிபோட, சிறந்த மேலாண்மை அவசியமானது. இவ்வாறு, கருணாகரன் பேசினார்.
பாரதியார் பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் இயக்குனர் வெங்கடபதி
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.