Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"பின்கோடு' விழிப்புணர்வு வினாடி வினா

"பின்கோடு' விழிப்புணர்வு வினாடி வினா

"பின்கோடு' விழிப்புணர்வு வினாடி வினா

"பின்கோடு' விழிப்புணர்வு வினாடி வினா

ADDED : ஆக 25, 2011 11:28 PM


Google News
கோவை : 'பின்கோடு' பற்றிய விழிப்புணர்வு வினாடி, வினா போட்டிக்கு, தபால் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தபால்கள், உரிய முகவரியை, உரிய காலத்தில் சென்றடைய, 'பின்கோடு' எண் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆறு இலக்கத்தில் அமைந்துள்ள எண்ணை பார்த்தவுடனேயே, குறிப்பிட்ட அந்த தபால், எந்த மாநிலத்துக்கு, எந்த மாவட்டத்துக்கு செல்ல வேண்டியது என்பதை, தபால் துறையினர் கூறி விடுவர். ஒரே பெயரில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் இருக்கும் பட்சத்தில்,'எந்த ஊருக்கு தபால் அனுப்புவது' என்ற குழப்பத்தை தீர்க்க உதவிகரமாக இருப்பது 'பின்கோடு' தான். இதை குறிப்பிடாமல் விடும்போது தான், பிரச்னைகள் ஏற்படுகின்றன; உரிய காலத்தில் தபால் சென்றடையாத நிலையும் ஏற்படுகிறது. எனவே, தபால்களில் 'பின்கோடு' எண் குறிப்பிடப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தபால் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இது குறித்து கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் குருநாதன் கூறியதாவது: தபால்களில், 'பின்கோடு' எண் குறிப்பிடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு வினாடி, வினா போட்டிக்கு தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது. கோவை, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்கலாம். இதுவரை 200 மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். செப்.,10ம் தேதி கோவை குட்ஷெட் ரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நடக்கும் இப்போட்டியை, லூயிஸ், ஜான் சுந்தரராஜன் ஆகியோர் நடத்துகின்றனர். பொது அறிவு, தபால் துறை திட்டங்கள், தபால் தலைகள், 'பின்கோடு' உள்ளிட்டவை பற்றிய கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு, குருநாதன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us