/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு பள்ளி மாணவர்கள் பெரும் அவதிதரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு பள்ளி மாணவர்கள் பெரும் அவதி
தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு பள்ளி மாணவர்கள் பெரும் அவதி
தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு பள்ளி மாணவர்கள் பெரும் அவதி
தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு பள்ளி மாணவர்கள் பெரும் அவதி
ADDED : ஆக 23, 2011 01:05 AM
ஓசூர் : ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்று தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பீதியுடன் ஆற்றை கடந்து செல்லும் நிலையுள்ளது.
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால், அணையில் இருந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர், ஓசூர் அடுத்த சென்னச்சந்திரம், முத்தாலி, ஆளுர், புக்காசாகரம், பாகலூர், தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனஅள்ளி, பார்த்தகோட்டா, குமுதேப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. தற்போது, தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தொரப்பள்ளி, பார்த்தகோட்டா உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலங்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி விட்டன. பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் ஆற்றை கடந்து செல்ல முடியவில்லை. முதியவர்கள், பள்ளி குழந்தைகள் ஆற்றை கடக்க முடியாமல் அச்சமடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் அவ்வப்போது அதிகளவு தண்ணீர் வருவதால், ஆற்றை கடந்து செல்வோர் வெள்ளத்தில் அடித்து செல்ல வாய்ப்புள்ளது. தற்போது, மழை காலம் துவங்கி விட்டதால், தரைப்பாலங்கள் உள்ள தொரப்பள்ளியில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கடம் அவதியடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் இதுபோன்ற வெள்ள பெருக்கு ஏற்படும் காலங்களில் தென்பெண்ணை ஆற்றுபாலத்தை கடக்க முடியாமல் தொரப்பள்ளி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கடந்த இரு ஆண்டுக்கு முன் தொரப்பள்ளி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் இங்கு மேம்பாலம் கட்டுவதற்கு அக்கறை காட்டாமல் இழுத்தடிப்பதால், மழை காலங்களில் தொரப்பள்ளி கிராம மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் ஊரில் முடங்கி கிடக்கும் அவலம் தொடர்கிறது.