ADDED : ஜூலை 13, 2011 01:52 AM
மஞ்சூர் : மஞ்சூர் அரசு மாணவர் விடுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
குந்தா தாலுகா அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட கலெக்டர் அர்ச்சனா
பட்நாயக், ஆய்வு பணிகளை முடித்த பின் புதியதாக கட்டப்பட்டு வரும் குந்தா
தாலுகா அலுவலகத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம்
கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரசு மாணவர் விடுதிக்கு சென்று மாணவர்களுக்கான
மதிய உணவுகளை ஆய்வு செய்தார். ஆய்வுப்பணியின் போது, குந்தா தாசில்தார்
விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.