பள்ளி கல்விக் கட்டண வழக்கு தள்ளிவைப்பு
பள்ளி கல்விக் கட்டண வழக்கு தள்ளிவைப்பு
பள்ளி கல்விக் கட்டண வழக்கு தள்ளிவைப்பு
ADDED : ஆக 23, 2011 01:07 AM
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு, கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து அறிவித்தது.
இந்தக் கட்டணத்தை ஏற்காத பள்ளிகள் சார்பில், 'நீதிபதி குழு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; கட்டணம் நிர்ணயம் தொடர்பாக எங்கள் ஆட்சேபனைகளை பரிசீலிக்க வேண்டும்' என ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களுக்கு, கட்டண நிர்ணய குழு சார்பில், அரசு பிளீடர் வெங்கடேஷ், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி பதில் மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கின் மீதான விசாரணையை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி வாசுகி அடங்கிய 'முதல் பெஞ்ச்', அக்., 24 க்கு தள்ளிவைத்துள்ளது.