Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கேமராமேன் சம்பள பிரச்னைசினிமா ஷூட்டிங் திடீர் ரத்து

கேமராமேன் சம்பள பிரச்னைசினிமா ஷூட்டிங் திடீர் ரத்து

கேமராமேன் சம்பள பிரச்னைசினிமா ஷூட்டிங் திடீர் ரத்து

கேமராமேன் சம்பள பிரச்னைசினிமா ஷூட்டிங் திடீர் ரத்து

ADDED : செப் 14, 2011 01:17 AM


Google News
கள்ளக்குறிச்சி:சினிமா கேமரா ஆபரேட்டர் குழுவினர் கூடுதல் சம்பளம் கேட்டு பிரச்னை செய்ததால், கல்வராயன்மலை பகுதியில், சினிமா படப்பிடிப்பு ரத்தானது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலையைச் சேர்ந்தவர் சாமிதுரை; சினிமா பட இயக்குனர்.

மாற்றுத் திறனாளியான இவர் திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்சிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.இவரும், ரவிராஜ் என்பவரும் இணைந்து, 'கூத்துக்கார பசங்க' என்ற படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில், குளிர் டிகிரி 100, சகாக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சஞ்சய் ஹீரோவாகவும், புதுமுக நாயகி மற்றும் பாண்டியராஜன், மனோபாலா, தவசி, குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த வள்ளிவைரவன், கிட்டு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்புகள், கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம், துரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 50 நாட்கள் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தனர்.நேற்று முன்தினம் எடுத்தவாய்நத்தத்தில் ஷூட்டிங் முடித்துக் கொண்டு, இரவு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் லாட்ஜில், படப்பிடிப்பு குழுவினர் தங்கினர்.நேற்று காலை மீண்டும் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் ஷூட்டிங் நடத்துவதற்கு குழுவினர் புறப்பட்ட போது கேமரா மேன், ஆபரேட்டர், லைட் மேன், கிரேன் ஆபரேட்டர் உள்ள 22 பேர் கொண்ட குழுவினர், தினந்தோறும் 370 ரூபாய் சம்பளம் வழங்கினால் தான் ஷூட்டிங்கிற்கு வருவோம் என்று பிரச்னை செய்துவிட்டு, சென்னைக்கு புறப்பட்டனர். இதனால் சினிமா ஷூட்டிங் நேற்று ரத்தானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us