/உள்ளூர் செய்திகள்/மதுரை/வார்டில் முழு சுகாதாரமே முதற் பணி : அ.தி.மு.க., வேட்பாளர் கோபி உறுதிவார்டில் முழு சுகாதாரமே முதற் பணி : அ.தி.மு.க., வேட்பாளர் கோபி உறுதி
வார்டில் முழு சுகாதாரமே முதற் பணி : அ.தி.மு.க., வேட்பாளர் கோபி உறுதி
வார்டில் முழு சுகாதாரமே முதற் பணி : அ.தி.மு.க., வேட்பாளர் கோபி உறுதி
வார்டில் முழு சுகாதாரமே முதற் பணி : அ.தி.மு.க., வேட்பாளர் கோபி உறுதி
ADDED : அக் 03, 2011 01:00 AM
மதுரை : ''மதுரை மாநகராட்சி 49வது வார்டில் வீட்டுக்கு ஒரு மரம், கழிப்பறை, பாதுகாக்காக்கப்பட்ட குடிநீர் வசதிகளை செய்து முழு சுகாதாரத்தை பேணுவதை முதற் பணியாக கொள்வேன்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர்
வக்கீல் தி.கோபி கூறினார்.
பாங்க்காலனி அ.தி.மு.க., கிளை செயலாளரான இவர், மதுரை மேற்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளராக இருந்துள்ளார்.
தி.கோபி கூறியதாவது: வார்டில் ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை வளர்க்க உதவுவேன். நாராயணபுரம் கண்மாய் கரைகளை பலப்படுத்தி, சுற்றிலும் நடைபாதை அமைத்து நடைபயிற்சி மேற்கொள்ள செய்வேன். கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி, சுற்றுலா படகு இயக்கப்படும். இளைஞர்கள் கம்ப்யூட்டர் அறிவு பெற இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும். மகளிர் சுய உதவி குழுவினர், வேலை வாய்ப்பு பெற தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். மக்கள் பங்களிப்புடன் 24 மணி நேர பாதுகாப்புக்கு தனியார் பாதுகாப்பு சர்வீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நானாகுளத்தில் கழிப்பறை, மின்மயானம், சிமென்ட் ரோடு அமைக்கப்படும். சிறுவர் பூங்கா அமைக்கப்படும். தாழ்த்தப்டோருக்கான குடியிருப்புகள் புதுப்பிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன். இலவச பொது மருத்துவ முகாம், கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படும், என்றார்.


