ADDED : செப் 23, 2011 04:29 AM
ஆனைமலை:ஆனைமலை அடுத்த சேத்துமடை பகுதிக்கு உட்பட்ட மயானத்தில்
'குடிமகன்கள்' தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார்
தெரிவிக்கின்றனர்.
ஆனைமலை அடுத்த சேத்துமடை பகுதியில் வேட்டைக்காரன்புதூரில் இருந்து
சேத்துமடை செல்லும் மெயின் ரோட்டின் அருகே மயானம் அமைந்துள்ளது. இந்த
மயானம் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் குடிமகன்கள் ஆக்கிரமிப்பு
செய்து இரவு நேரங்களில் 'பார்' ஆக மாற்றிவிட்டனர்.
சுடுகாட்டிலுள்ள கேட்டையும், மின்விளக்குகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த மின் விளக்குகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரிசெய்து கொடுக்க வேண்டும்
என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.