Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் அரசு பஸ் ஜப்தி

தூத்துக்குடியில் அரசு பஸ் ஜப்தி

தூத்துக்குடியில் அரசு பஸ் ஜப்தி

தூத்துக்குடியில் அரசு பஸ் ஜப்தி

ADDED : ஜூலை 27, 2011 02:18 AM


Google News
தூத்துக்குடி : வல்லநாட்டில் நடந்த விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டதுவல்லநாட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து.

இவர் அங்குள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி-நெல்லை ரோட்டில் செல்லும் போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக இவரது குடும்பத்தினர் இழப்பீட்டு தொகை கேட்டு தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் இறந்துபோன மாரிமுத்து குடும்பத்திற்கு இழப்பீட்டுதொகையாக வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து77 ஆயிரத்து185 வழங்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.தீர்ப்பில் கூறியபடி இழப்பீட்டு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லையென்று கூறப்படுகிறது. இதையடுத்து மாரிமுத்து குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பிரபுதாஸ் இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.நீதிபதியின் உத்தரவின்படி கோர்ட் அமினா நடராஜன் தூத்துக்குடி பஸ்ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் மகேந்திரன் ஆஜராகிவாதாடினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us