பாதைத் தகராறில் ஒருவர் திடீர் கைது
பாதைத் தகராறில் ஒருவர் திடீர் கைது
பாதைத் தகராறில் ஒருவர் திடீர் கைது
ADDED : ஜூலை 21, 2011 02:32 AM
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே பாதை தகராறில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாகரம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் வீரமணி(23). சம்பவத்தன்று தனது வீட்டு முன்புறம் அமர்ந்திருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேந்திரன்(38). பாதையில் உட்காராதே நடந்து செல்ல இடையூறாக உள்ளது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி அவரை அடித்து உதைத்து திட்டினார்.
இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் எஸ்.ஐ., இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது விசாரித்து வருகிறார்.


