/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மனநோயாளிகள் மீதான அரசு உத்தரவு ஏர்வாடியில் நடவடிக்கை எப்போதுமனநோயாளிகள் மீதான அரசு உத்தரவு ஏர்வாடியில் நடவடிக்கை எப்போது
மனநோயாளிகள் மீதான அரசு உத்தரவு ஏர்வாடியில் நடவடிக்கை எப்போது
மனநோயாளிகள் மீதான அரசு உத்தரவு ஏர்வாடியில் நடவடிக்கை எப்போது
மனநோயாளிகள் மீதான அரசு உத்தரவு ஏர்வாடியில் நடவடிக்கை எப்போது
ADDED : ஜூலை 13, 2011 02:31 AM
கீழக்கரை : ஆதரவற்ற மனநோயாளிகள், பிச்சைக்காரர்களை மீட்டு அந்தந்த பகுதி
மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து ஆதரவற்றோர் இல்லம், காப்பகங்களில்
சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மன நோயாளிகள் அதிகமாக திரியும்
ஏர்வாடியில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மன நிலை
பாதிக்கப்பட்டவர்களை உடன் வைத்திருப்பதை அவமான சின்னமாக கருதும் பலர்
வாகனங்களில் ஏர்வாடிக்கு அழைத்து வந்து அனாதையாக விட்டுச் செல்கின்றனர்.
கந்தலாடை, அழுக்குபடிந்த உடல், வறண்ட தலைமுடி என உருமாறி உலாவும் இவர்கள்
ஏர்வாடி தர்காவை சுற்றி வருகின்றனர். பலர் இரவு நேரத்தில் பயங்கர
சப்தமிடுகின்றனர்.இந்நிலையில் அரசு உத்தரவுபடி, டாக்டர்கள் குழு மற்றும்
வருவாய் துறையினர் ஏர்வாடியில் தேடுதல் வேட்டை நடத்தி மன நோயாளிகளை
பிடிக்கப்போவதாக தகவல் வந்தது. போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
இருப்பினும் நேற்று வரை எவ்வித தேடுதல் வேட்டையும் நடத்தப் படவில்லை.


