/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சுவர் விளம்பரம்: ஒரே நாளில் 6 வழக்குகள் பதிவுசுவர் விளம்பரம்: ஒரே நாளில் 6 வழக்குகள் பதிவு
சுவர் விளம்பரம்: ஒரே நாளில் 6 வழக்குகள் பதிவு
சுவர் விளம்பரம்: ஒரே நாளில் 6 வழக்குகள் பதிவு
சுவர் விளம்பரம்: ஒரே நாளில் 6 வழக்குகள் பதிவு
ADDED : அக் 07, 2011 01:10 AM
திருவள்ளூர் : மாவட்டத்தில் தேர்தல் விதியை மீறி, அனுமதியின்றி தேர்தல் விளம்பரம் செய்ததாக, 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த, தண்ணீர்குளம் கிராம நடுநிலைப் பள்ளி அருகே, தேர்தல் விதியை மீறி விளம்பரப் பலகை வைத்ததாக, தி.மு.க., ஒன்றியச் செயலர் தயாளன் மீது, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் வெள்ளியூர் பஸ் நிலையத்தில் விளம்பரம் செய்ததாக தே.மு.தி.க., மாவட்ட துணைச் செயலர் நரசிம்மா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய மகளிர் அணி செயலர் காஞ்சனா, தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் விளம்பரப் பலகை வைத்ததாக, தே.மு.தி.க., ஒன்றிய இளைஞர் அணி செயலர் சுந்தரமூர்த்தி, பாகல்மேடு பகுதியில் விளம்பரம் செய்ததாக, 14வது வார்டு தி.மு.க., கிளைச் செயலர் சம்பத், சுயேச்சை வேட்பாளர் பவுல்தாஸ் ஆகியோர் மீது, வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


