/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வள்ளியூரில் இலவச கம்ப்யூட்டர்பயிற்சி மையம் திறப்புவள்ளியூரில் இலவச கம்ப்யூட்டர்பயிற்சி மையம் திறப்பு
வள்ளியூரில் இலவச கம்ப்யூட்டர்பயிற்சி மையம் திறப்பு
வள்ளியூரில் இலவச கம்ப்யூட்டர்பயிற்சி மையம் திறப்பு
வள்ளியூரில் இலவச கம்ப்யூட்டர்பயிற்சி மையம் திறப்பு
ADDED : ஆக 26, 2011 01:36 AM
வள்ளியூர்:வள்ளியூரில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை
முன்னிட்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை எம்.எல்.ஏ.,மைக்கேல்
ராயப்பன் திறந்து வைத்தார்.தேமுதிக சார்பில் வள்ளியூர் பயணியர் விடுதி
ரோட்டில் உள்ள கட்டடத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம்
அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்தின்
பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வள்ளியூர்
நகர செயலாளர் முருகராஜா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் துரை,
விஜய்கணேசன் முன்னிலை வகித்தனர்.இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை
ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல்ராயப்பன் திறந்து வைத்து
பேசியதாவது:-''கட்சி தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு
வள்ளியூரில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் திறப்பதில்
மகிழ்ச்சியடைகிறேன். நெல்லை மாவட்டத்தில் முதலாவதாக சேரன்மகாதேவியிலும்,
இரண்டாவதாக வள்ளியூரிலும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் காலை 8 மணி
முதல் இரவு 8 மணி வரை 10ம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு இலவசமாக
கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனை நன்கு பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்'' என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட மகளிரணி துணை
செயலாளர் கோதை நாச்சியார், ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் ரவி, ராதாபுரம்
ஜெயராஜ், நகர அவைத்தலைவர் மைக்கிள் தங்கம், பொருளாளர் கனகராஜ், கேப்டன்
மன்ற செயலாளர் செல்லத்துரை, மகளிரணி ஸ்மைலி மார்க்ரெட் கேதரின், மாவட்ட
நிர்வாகி விஜிவேலாயுதம், சிதம்பரபாஸ்கர், சுரேஷ் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.முன்னதாக வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் விஜயகாந்த்
பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தி கட்சி நிர்வாகிகள்
இனிப்புகள் வழங்கினர்.