/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடிநீர் குழாயில் கழிவுநீர்: ராயப்பேட்டையில் அவலம்குடிநீர் குழாயில் கழிவுநீர்: ராயப்பேட்டையில் அவலம்
குடிநீர் குழாயில் கழிவுநீர்: ராயப்பேட்டையில் அவலம்
குடிநீர் குழாயில் கழிவுநீர்: ராயப்பேட்டையில் அவலம்
குடிநீர் குழாயில் கழிவுநீர்: ராயப்பேட்டையில் அவலம்
சென்னை: ராயப்பேட்டை பகுதியில், குடிநீரில் சாக்கடை கலப்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, தலையாரி தெரு, பெருமாள் முதலி தெரு, ராமசாமி கார்டன் தெரு ஆகிய பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இதுகுறித்து, ஜான்ஜானிகான் சாலையில் உள்ள குடிநீர் வாரிய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தால், பெயரளவுக்கு தற்காலிகமாக சுத்தம் செய்துவிட்டு, 'சில நாட்களில் சரி செய்கிறோம்' என, உத்தரவாதம் அளித்து, புகார் கொடுத்தவர்களிடம் கையெழுத்து பெற்றுச் செல்கின்றனர்.குடிநீர் குழாய்க்கும், கழிவுநீருக்கும் எங்கே தொடர்பு உள்ளது, அதை சரிசெய்வது எப்படி என்பது பற்றி, அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், அவர்கள் கையெழுத்து பெற்றுச் சென்ற மறுநாளே மீண்டும் கழிவுநீர் கலந்து குழாய் களில் தண்ணீர் வருகிறது. இதனால், இப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நீண்டகாலமாக இருந்து வரும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணக் கோரி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்தவும், முதல் வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் அனுப்பவும், இப்பகுதி வாசிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.


